கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திங்கள்சந்தை - மணவாளக்குறிச்சி சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

திங்கள்சந்தை - மணவாளக்குறிச்சி சாலையில்  திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:02 pm

DIN

திங்கள்சந்தை - மணவாளக்குறிச்சி சாலையில்  திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் குழித்துறை தாமிரவருணி ஆற்றிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம்  கன்னியாகுமரி வரை குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழாய்கள் பல நேரங்களில் சேதமடைவதால், நீர்கசிவு ஏற்பட்டு சாலை சேதமடைவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில்,  வியாழக்கிழமை காலை 7 மணிக்கு,  மணவாளக்குறிச்சி - திங்கள்நகர் சாலையில், சேரமங்கலம் பகுதியில் பதிக்கப்பட்டிருந்த ராட்சத குழாய் உடைந்தது. இதில் தண்ணீர் வேகமாக பீய்ச்சி அடித்ததால் சாலையில் பெரும்பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். சாலை சேதமடைந்ததால் இப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.