நாகர்கோவில் இருளப்பபுரத்தில் தேவார, திருமுறை இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
இருளப்பநாடார் உறவின்முறை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தொழிலதிபர் ஈ.எஸ்.எம்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். திருவாவடுதுறை ஆதீன சமய வகுப்பு வித்தகர் ஓதுவார் கிருஷ்ணமூர்த்தி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்கள் பாடி அதற்கான விளக்கத்தை அளித்தார்.
நிகழ்ச்சியில், அறக்கட்டளை செயலர் என்.எஸ்.விஜயன், பொதுச் செயலர் எஸ்.பாரத்சிங், நிர்வாக அறங்காவலர் வி.சாம்பசிவம், சித்தாந்த ரத்தினம் எஸ்.ரமேஷ், எஸ். ஆனந்தி ரமேஷ், வழக்குரைஞர் வலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.