கோட்டாறு சவேரியார் பேராலய முப்பெரும் விழா: நவ.18இல் தொடக்கம்
நாகர்கோவில் கோட்டாறு தூய சவேரியார் பேராலயத்தின் பொலிவூட்டல் அர்ச்சிப்பு விழா, தூய சவேரியார் இந்திய வருகையின் 475ஆவது ஆண்டு விழா


நாகர்கோவில் கோட்டாறு தூய சவேரியார் பேராலயத்தின் பொலிவூட்டல் அர்ச்சிப்பு விழா, தூய சவேரியார் இந்திய வருகையின் 475ஆவது ஆண்டு விழா மற்றும் பேராலய திருவிழா ஆகிய முப்பெரும் விழா நவ.18ஆம் தேதி தொடங்குகிறது.
தொடக்க நிகழ்ச்சியாக அன்று மாலை 5.30 மணிக்கு புதுப்பொலிவூட்டப்பட்ட பேராலய அர்ச்சிப்பு விழா நடைபெறுகிறது. விழாவுக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை வகித்து மறையுரையாற்றுகிறார். இரவு 7.30 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது. நவ.19முதல் 21ஆம் தேதி வரை மாலை 6 மணிக்கு நற்செய்தி பெருவிழா நடைபெறுகிறது. தூய சவேரியார் பேராலய திருவிழா நவ. 24ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 6.15 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம், ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிக்கு கிலேரியஸ் தலைமை வகித்து மறையுரையாற்றுகிறார்.
தொடர்ந்து விழா நாள்களில் காலை, மாலை வேளைகளில் திருப்பலியும், ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியும் நடைபெறுகின்றன. 9ஆம் திருநாளான டிச. 2ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஓய்வு பெற்ற கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர்ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியும் நடைபெறுகின்றன. இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது.
டிச.3ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் மாலை ஆராதனையும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகின்றன. இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடைபெறும். திருவிழா நிறைவு நாளான டிச. 4ஆம் தேதி புனித சவேரியார் பெருவிழா திருப்பலியும், 8 மணிக்கு கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலியும் நடைபெறுகின்றன. முற்பகல் 11 மணிக்கு தேர் பவனி, இரவு 7 மணிக்கு ஆடம்பரக் கூட்டு தேர்த் திருப்பலி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை, கோட்டாறு வட்டார முதல்வர் மைக்கிள் ஆஞ்சலூஸ், பங்கு அருள்பணியாளர் கிரேஸ் குணபால்ஆராய்ச்சி, இணை பங்கு அருள்பணியாளர் சகாய ஆனந்த், தலைவர் அந்தோணிசாமி, செயலர் அந்தோணி சவரிமுத்து, உதவிச் செயலர் ஆஸ்டின், பொருளாளர் இன்பராஜ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...