மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மேற்கு வங்க பெண் குமரியில் மாயம்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் காணாமல் போன மேற்கு வங்க மாநில பெண்ணை போலீஸார் தேடி வ ருகின்றனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:50 am

DIN

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் காணாமல் போன மேற்கு வங்க மாநில பெண்ணை போலீஸார் தேடி வ ருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத், மேல்பத்தேபூர் பகுதியைச் சேர்ந்த 100 பேர் கன்னியாகுமரிக்கு கடந்த 4ஆம் தேதி சுற்றுலா வந்தனர். அங்குள்ள கோயிலுக்கு அனைவரும் சென்றுதிரும்பியபோது,  அவர்களுடன் சுற்றுலா வந்திருந்த பிரேந்தர நாத்தாஸ் (72) என்பவரின் மனைவி அஞ்சலிதாஸ் (65) என்பவரை காணவில்லையாம். கன்னியாகுமரியில் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாததால் உடன் சுற்றுலா வந்தவர்கள் ஊருக்குத் திரும்பிச் சென்றனர். பிரேந்தர நாத்தாஸ் மட்டும் கன்னியாகுமரியில் கடந்த சில நாள்களாக தங்கியிருந்து மனைவியைத் தேடிவந்தார். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் வீரராக உள்ள தனது மகன் பிபாஸ்குமார்தாஸுக்கு தகவல் கொடுத்தார். அவர் கன்னியாகுமரி விரைந்தார். இரண்டு பேரும் தேடியும் கிடைக்காத நிலையில் புதன்கிழமை கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் ஜெபஸ்டின் கிரேசியஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.