விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோழிவிளை - மருதங்கோடு சாலையில் சுகாதாரச் சீர்கேடு

களியக்காவிளை அருகே கோழிவிளை - மருதங்கோடு சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:48 am

DIN

களியக்காவிளை அருகே கோழிவிளை - மருதங்கோடு சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
முன்சிறை ஊராட்சி ஒன்றியம், குளப்புறம் ஊராட்சிக்கு உள்பட்ட கோழிவிளை - மருதங்கோடு சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கோழிவிளை இலங்கை தமிழ் அகதிகள் முகாமிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் இச் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் இந்தக் கழிவுநீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது; அப்பகுதியிலுள்ள புளியங்குளமும் பயன்படுத்த முடியாத வகையில் பாழடைந்து காணப்படுகிறது.
ஆகவே அகதிகள் முகாமிலிருந்தும், இறைச்சிக் கடைகளிலிருந்தும் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்காதவாறு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.