மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திருவட்டாறு கோயிலில் வழக்குரைஞர் கமிஷன் 2 ஆம் கட்ட ஆய்வு

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நீதி மன்றம் நியமித்த வழக்குரைஞர் கமிஷன் இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 10:31 pm

DIN

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நீதி மன்றம் நியமித்த வழக்குரைஞர் கமிஷன் இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதாகவும், இத்திருப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்து திருவட்டாறு ஒன்றியத் துணைத் தலைவர் அய்யப்பன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
  இதையடுத்து நீதி மன்றம் கோயிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் படி கார்த்திக், கண்ணன் ஆகிய இருவர் அடங்கிய வழக்குரைஞர் கமிஷனை கடந்த மாதம் 21 ஆம் தேதி நியமித்தது. இந்த கமிஷன் கடந்த மாதம்  கோயிலுக்கு வந்து முதற்கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் கோயிலுக்கு வந்த வழக்குரைஞர் கமிஷன்  2 ஆம் கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.