குமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் அருகே அனுமதியின்றி வெடி மருந்து மூலம் பாறைகளை தகர்த்ததாக, வருவாய் அதிகாரி உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேங்காய்பட்டினம் அருகேயுள்ள பாறைக்காணி பகுதியில் இருந்த பாறைகளை சிலர் வெடி வைத்து தகர்த்தனராம். இதனால், பயங்கர சப்தம் கேட்டதுடன், அப்பகுதியில் இருந்த வீட்டில் விரிசலும் ஏற்பட்டதாம். உடனே, அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் திரண்டதாலம் பரபரப்பு நிலவியது.
இச்சம்பவம் குறித்து அதே பகுதியைச் சேர்ந்த பிஜூ என்பவர் அளித்த புகாரின் பேரில், புதுக்கடை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, உரிய அனுமதி இல்லாமல் வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகளை தகர்த்தது தெரியவந்ததாம்.
இதையடுத்து வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? - நிலையாமைக் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்!

நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

ஜாக்கிரதை, நான் பேசினாலே பிரச்னைதான்: நடிகர் ரஜினிகாந்த்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


