தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

என்.ஐ. பல்கலையில் ஏப்.11, 12இல் மாநில பளுதூக்கும் போட்டி

குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில்,  பல்கலைக்கழகங்களுக்கு இடையே  மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி ஏப்.11,  12 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 12:53 am

குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில்,  பல்கலைக்கழகங்களுக்கு இடையே  மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி ஏப்.11,  12 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், என்.ஐ. பல்கலைக்கழகமும் இணைந்து மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியை நடத்துகின்றன. 
இதில், தமிழகத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத்திலுள்ள இருபால் பளுதூக்கும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டிகள் இருபாலருக்கும் தனித் தனியாக உடல் எடை அடிப்படையில் 8 பிரிவுகளில் நடைபெறுகிறது.
ஏப். 11ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிக்கு, இணை துணை வேந்தர் சந்திரசேகர்,  மாவட்ட விளையாட்டு அலுவலர்  தீர்த்தோஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.பி.மஜீத்கான் குத்துவிளக்கேற்றி வைக்கிறார். மனிதவள மேம்பாட்டு இயக்குநர் கே.ஏ.ஜனார்த்தனன் வரவேற்கிறார். தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்கத் தலைவர் பொன்.ராபர்ட்சிங் போட்டியைத் தொடங்கிவைக்கிறார். 
சிறப்பு விருந்தினராக ஒலிம்பிக் வீரர் சிவராஜ் பங்கேற்கிறார். உடற்கல்வி இயக்குநர் தர்மராஜ் நன்றி கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.