ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் சங்கத் தலைவர் செல்வராஜ், செயலர் ராஜாசிங் ஆகியோர் குமரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமைஅளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நடத்தவேண்டும். மருத்துவ உதவி, புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதியர்களுக்கு வருகிற ஜூலை 1ஆம் தேதியில் இருந்து 2022 ஜூன் 30 ஆம் தேதி வரை 4 ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீடு ரூ. 5 லட்சமாகவும், கேன்சர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ரூ. 7.5 லட்சமாகவும் உயர்த்தவேண்டும். மருத்துவச் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு முழுமையான செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்கவேண்டும். மருத்துவமனைகளில் பேக்கேஜ் முறை ஒழிக்கப்படவேண்டும். நோய்கள், மற்றும் மருத்துவமனைகளுக்கான பட்டியலுக்கு மட்டுமே காப்பீடு பொருந்தும் என்றில்லாமல், அனைத்து மருத்துவமனைகளிலும், எல்லா நோய்க்கும் சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரித் துறை அபராதத்தை எதிா்த்த வழக்கு தள்ளுபடி: விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல்

வில்லிவாக்கம் தொகுதி அலசல்! வலிமையான வியூகங்களில் வேட்பாளா்கள்

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

மகளிா் கல்லூரி ஆண்டு விழா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

