கருங்கல் அருகே தாழக்கன்விளை பகுதியில் திங்கள்கிழமை கேரளத்துக்கு மண்ணெண்ணெய் கடத்திச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் வந்த ஒரு சொகுசு வேன் முள்ளங்கனாவிளையிலிருந்து கிள்ளியூரை நோக்கி வேகமாக சென்றபோது, தாழக்கன்விளை பகுதியில் உள்ள ஒரு மதில் சுவர் மீது மோதிய நின்றது. இதையடுத்து, அப்பகுதியினர் வேன் முன் திரண்டனர்.இதனைகண்ட ,வேன்ஓட்டுநர் தப்பி ஓடி விட்டாராம். அங்கு திரண்ட பொதுமக்கள், வேனை சோதனை செய்தபோது அதில் 21 கேன்களில் 400 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த பறக்கும்படை வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையிலான குழுவினர் மண்ணெண்ணையை கைப்பற்றி தூத்தூரில் உள்ள மண்ணெண்ணை கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மோகன்லால் - 366 படத்தின் பெயர் அறிவிப்பு!

திமுக மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!
தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

