தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தனர்.
இதில், அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையிலான புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சென்றடைந்ததை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இப்புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும், பேருந்து நிலையத்தில் திரையிடப்பட்ட தமிழக அரசின் ஓராண்டு சாதனை செய்தி மலர் "அம்மா வழியில் நல்லாட்சி - அதற்கு ஓராண்டு சாதனையே சாட்சி' குறும்படம் விடியோ படக்காட்சியையும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தேச கலையரசன், வருவாய் கோட்டாட்சியர் இரா.ஜானகி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) எஸ். செல்வலெட்சுஷ்மா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

