கூட்டுறவுத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதால் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கூட்டுறவு அதிகாரி தாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் 464 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக 114 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், பல கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.
முறைகேடுகள் நடந்த கூட்டுறவு சங்கங்களில் தேர்தலை ரத்துசெய்து மறு தேர்தல் நடத்தவும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், 115 கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டாவது கட்டமாக கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி திங்கள்கிழமை அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்றது.
3 ஆவது கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அதன் உறுப்பினர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு சென்றனர். அப்போது, வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் இல்லை எனக் கூறி, அவர்களது வேட்பு மனுக்களை வாங்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட இந்த கூட்டுறவுச் சங்கத்தில் 1,800 பேரை முறைகேடாக அதிகாரிகளும், கூட்டுறவு சங்க நிர்வாகமும் நீக்கியுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட உறுப்பினர்களும், பொதுமக்களும் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுனில்குமார் என்ற அதிகாரி தாக்கப்பட்டதோடு, அங்கிருந்த கணினியும் சேதப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் நடுக்காட்டு ராஜா தலைமையில், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, தேர்தலின் போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால் தேர்தலை ரத்துசெய்வதாக இணைப் பதிவாளர் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
போராட்டத்தையொட்டி, பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

