/

மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுயில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:54 am

காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுயில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. ஜே.ஜி. பிரின்ஸ் முன்னிலை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் எம். பால்ராஜ்,  ஆர். கிறிஸ்டோபர், டி. காஸ்டன் கிளிட்டஸ்,  எம். ராபின்சன்பாபு,  குழித்துறை நகரத் தலைவர் அருள்ராஜ்,  பத்மநாபபுரம் நகரத் தலைவர் ஹனுக்குமார், மாவட்ட சிறுபான்மைத் துறை தலைவர் பி. செல்வகுமார், மாவட்ட எஸ்.சி. துறை தலைவர் ஏ. ஜஸ்டின்,  மாவட்ட துணைத் தலைவர்கள் பால்மணி,  மோகன்தாஸ்,  மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தம்பி விஜயகுமார்,  ஜோதிஸ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க திங்கள்கிழமை (ஏப். 9) கட்சி சார்பில் தக்கலையில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டம் குறித்தும், வரும் 20ஆம் தேதி மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளும் மாவட்ட,  வட்டார,  நகர,  பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்ட சுற்றுப் பயணம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.