சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 11:22 pm

குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமை வகித்தார். இதில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை  உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 314 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.  பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ, தனித்துணை ஆட்சியர் மு. சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அரசு  உயர்அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.