அழகியமண்டபம் அருகே பிலாங்காலையில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மேற்கு மாவட்ட திமுக செயலர் மனோதங்கராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாதவன், விடுதலைச் சிறுத்தைகள் மாத்தூர் ஜெயன், இந்தியன் முஸ்லிம் லீக் திருவை செய்யது, மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார், வர்க்கீஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தக்கலையில் ஏப். 23ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் மனிதச் சங்கலி போராட்டத்தை சிறப்பாக நடத்துவது; போராட்டத்தில் அனைத்து வர்த்தக சங்கங்கள், தொழிலாளர்கள், தோழமை கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளச்செய்து போராட்டத்தை வெற்றிபெற வைப்பது' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம்!
பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2-வது முறை உயர்வு!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
