சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

2 வட்டங்களில் நாளை அம்மா திட்ட சிறப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில்  2 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.20) நடைபெறுகிறது.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:40 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில்  2 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.20) நடைபெறுகிறது.
இது குறித்து,  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் அம்மா திட்ட 4ஆம் கட்ட சிறப்பு முகாம்  ஏப்.20  ஆம் தேதி கல்குளம் வட்டத்தில் கடியப்பட்டினம் வருவாய் கிராமத்திற்கு, கடியப்பட்டினம், புனித பீட்டர் நடுநிலைப் பள்ளியிலும், விளவங்கோடு வட்டத்தில் குளப்புறம் வருவாய் கிராமத்திற்கு, பிறாக்கோடு, கிறிஸ்து அரசர் உயர்நிலைப் பள்ளியிலும் காலை 10 மணியளவில்  நடைபெறவுள்ளது.
இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குள்பட்ட நிலபிரச்னைகள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.