ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு

கொல்லங்கோடு அருகே விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:57 am IST

கொல்லங்கோடு அருகே விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
கொல்லங்கோடு அருகேயுள்ள செட்டிசார்விளை பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (21). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 12 ஆம் தேதி இவர் மோட்டார் சைக்கிளில் செங்கவிளை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, புஸ்பகிரி பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.