காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கருங்கல் பகுதியில் பழுதடைந்த மழைநீர் ஓடைகளை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் நகரப் பகுதியில் உள்ள பழுதடைந்த மழைநீர் ஓடைகளை மழைக்காலம் தொடங்கும்  முன்பாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:49 pm

DIN

கருங்கல் நகரப் பகுதியில் உள்ள பழுதடைந்த மழைநீர் ஓடைகளை மழைக்காலம் தொடங்கும்  முன்பாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட கருமாவிளை, குறும்பனை சந்திப்பு, காவல்நிலையம், ராஜீவ்சந்திப்பு, பேருந்து நிலைய வெளிப்புறவாயில், கூனாலுமூடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஓடை பலஆண்டுகளாக குப்பைகள் நிரம்பி தூர்ந்து காணப்படுகின்றன. மழைக்காலங்களில் மழைநீர் வெகுவாக செல்லமுடியாமல் சாலை வழியே செல்கிறது. இதனால் அப்பகுதி சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது.
குறிப்பாக ராஜீவ்காந்தி சந்திப்பு,  பேருந்து நிலைய வெளிவாயில், கூனாலுமூடு பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். 
எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக கருங்கல் பகுதியில் உள்ள மழைநீர் ஓடைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.