ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரை பௌர்ணமி விழா

குற்றாலத்தில் செண்பகாதேவி அருவிக்கரையோரம் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயில் சித்திரை பௌர்ண

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:57 pm

DIN

குற்றாலத்தில் செண்பகாதேவி அருவிக்கரையோரம் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயில் சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் தீர்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் சித்திரை பெளர்ணமி விழா கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினம்தோறும் அம்மனுக்கு அபிஷேகம்,அலங்காரம், தீபாராதனை, அம்மன் புறப்பாடு, உச்சிக்கால பூஜை, மாலையில் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலையில் அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சிறப்பு வழிபாடு, இரவில் வில்லிசை, நள்ளிரவில் சித்திரை பௌர்ணமி சிறப்பு வழிபாடு ஆகியன நடைபெற்றன. திங்கள்கிழமை காலையில் செண்பகாதேவி அருவியில் மஞ்சள் தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.