இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

வருவாய்த்துறை அலுவலர் சங்க முப்பெரும் விழா

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க கன்னியாகுமரி மாவட்டக் கிளை சார்பில், மனமகிழ் மன்ற 9ஆவது ஆண்டு விழா, மாநில மையக் கட்டட

Updated On :

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க கன்னியாகுமரி மாவட்டக் கிளை சார்பில், மனமகிழ் மன்ற 9ஆவது ஆண்டு விழா, மாநில மையக் கட்டட நிதி வழங்கும் விழா, பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற வருவாய்த் துறை அலுவலர் சங்க குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மோ.கோலப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ப.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா ஆகியோர் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற வருவாய்த் துறையினரின் குழந்தைகள் 25 பேருக்கு பரிசுத்தொகை மற்றும்  சான்றிதழ்களை  வழங்கி பேசினர். மாநில துணைத் தலைவர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நெல்லை கண்ணண் தலைமையில் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பெரும்பங்கு பெற்றோர்களே!  சமூகமே!  என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பத்மநாபபுரம் சார்-ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, பயிற்சி ஆட்சியர் பிரதிக்தயாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில்,  அரசு ஊழியர் சங்கத் தலைவர் பகவதியப்பன் பிள்ளை, செயலர் கிறிஸ்டோபர், முன்னாள் மாவட்டத் தலைவர் தாணுகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலர் ரவிச்சந்திரன்,  துணைத் தலைவர் சேகர்,  வட்டக் கிளைத் தலைவர் திருவாழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
நிகழ்ச்சிகளை அகஸ்தீசுவரம் வட்டக் கிளைத் தலைவர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார். சங்கப் பொருளாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.