கிள்ளியூர் பேரவைத் தொகுதிக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கன மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளனர். தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தன. கணபதியான்கடவு, மங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக அங்குள்ளஅரசு நடுநிலைப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.