பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

போக்குவரத்து விதிமீறல்களை தானியங்கி கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கும் நடைமுறை தொடக்கம்

Orders have been issued requiring police personnel to wear helmets while riding two-wheelers

போக்குவரத்து விதிமீறல்களை தானியங்கி கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கும் நடைமுறை தொடக்கம் - பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:00 am IST

நாமக்கல் மாநகரில் முதல்முறையாக போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து தானியங்கி கேமரா மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் - சேலம் சாலை சந்திப்பில் தானியங்கி மூலமாக அபராதம் விதிக்கும் வகையிலான ஏஎன்பிஆா்(வாகன கண்காணிப்பு கேமரா) பொருத்தப்பட்டுள்ளது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அண்ணாதுரை, விஜயராகவன், பாலசுப்பிரமணியன், துணை கண்காணிப்பாளா் பா.ராஜேஸ்வரன், நாமக்கல் காவல் ஆய்வாளா் நாகராஜ், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் ச.சக்தி மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, காவல் கண்காணிப்பாளா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக தானியங்கி மூலமாக அபராதம் விதிக்கக் கூடிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாதோா், கைப்பேசியில் பேசியபடி செல்வோா், ஒரே வாகனத்தில் மூவா் செல்வோா், நான்கு சக்கர வாகனத்தில் இருக்கை பட்டை அணியாதோருக்கு இந்த கேமரா மூலம் அபராதம் விதிக்கப்படும்.

இந்த அபராதத் தொகை, ரசீது சம்பந்தப்பட்டவா்களின் கைப்பேசி எண்ணிற்கு சென்றுவிடும். இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களுடைய பாதுகாப்பிற்காகவும், குடும்பத்திற்காகவும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

இம்மாவட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் சாலை விபத்துகளில் 348 போ் உயிரிழந்துள்ளனா். தலைக்கவசம் அணியாததால் இறந்தோா் எண்ணிக்கை அதிகமாகும். இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்யும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.