அருமனை அருகே தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கேரள மாநிலப் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருமனை அருகே மாங்கோடு விராலிக்கோணத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது வீட்டிலிருந்து அண்மையில் 4.5 பவுன் நகைகள் திருடு போயிருந்தன. மேலும், கீழ்மாங்கோடு சதீஷ் குமார் வீட்டிலிருந்து 6 கிராம் தங்க மோதிரங்கள், காரோடு நாரகத்தின் குழி என்ற இடத்தைச் சேர்ந்த ராஜு என்பவரது சைக்கிள் கடையிலிருந்து ஒரு சைக்கிள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தன. இச்சம்பவங்கள் தொடர்பாக அருமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவங்களில் தொடர்புடைய கேரள மாநிலம் வெள்ளறை பகுதியைச் சேர்ந்த அருண் (27), ஆகாஷ் (20) மற்றும் கண்ணுமாமூடு பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோரை பிடித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைவருக்கும் தரமான வீடு: முதல்வா் விஜய் அறிவுறுத்தல்

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் நூதன புஷ்ப பல்லக்கு
சட்டவிரோத மணல் குவாரி வழக்கு: 3 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை

2020 அமெரிக்க அதிபா் தோ்தலில் சீனா தலையீடு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


