நாகர்கோவிலில் லலிதா ஜூவல்லரி ஷோரூம் திறப்பு

நாகர்கோவிலில் லலிதா ஜூவல்லரி ஷோரூம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நாகர்கோவிலில் லலிதா ஜூவல்லரி ஷோரூம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் தங்க நகை விற்பனையில் முன்னணி வகித்து வரும் லலிதா ஜூவல்லரி, தனது 17 ஆவது ஷோரூமை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கே.பி.சாலையில் அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு லலிதா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநர் பி.ராஜேஷ் தலைமை வகித்தார்.  டாக்டர் சுமித்ரா ரகுவரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். லலிதா ஜூவல்லரி நாகர்கோவில் கிளை உதவி மேலாளர்கள் வி.ஆர்.கண்ணன், பி.டி.குமார் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் தொழில் அதிபர் ஷேகுதாவூத், நஸீமா ஷேகு, செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா சலுகையாக அனைத்து தங்க நகைகளுக்கும் லலிதா ஜூவல்லரியின் மிகக் குறைந்த சேதாரத்திலிருந்து  மேலும் 1 சதவீத சேதாரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை குறுகிய காலத்துக்கு மட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com