மோட்டார் சைக்கிள் விபத்தில் நெல்லை இளைஞர் சாவு

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
Updated on
1 min read

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம், பெருங்குடியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.  ஒழுகினசேரி பாலத்தில் இருந்து பழையாறு செல்லும் சாலையில் சென்றபோது,  எதிர்பாராதவிதமாக சாலை ஓர மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பழையாற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் தூக்கி  வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராஜேஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com