மண்டல தடகளப் போட்டிகாமராஜ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சாதனை
மண்டல அளவிலான தடகளப்போட்டியில் பழவிளை காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


மண்டல அளவிலான தடகளப்போட்டியில் பழவிளை காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தொழில்நுட்பக்கல்லூரிகளுக்கு இடையே மண்டல அளவிலான தடகளப்போட்டிகள்ஸ்ரீ வில்லிபுத்தூர் கலசலிங்கம் தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம், பழவிளை காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் பி.சங்கரவிக்னேஸ் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசையும், என்.முருகேஷ் 400 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் பரிசையும், மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சங்கரவிக்னேஷ், முருகேஷ், எஸ்.கே.மகேஷ்வர், எஸ்.எம்.செரில் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற இம் மாணவர்களை கல்லூரித் தலைவர் எஸ்.சோமசுந்தரம், கல்லூரிச் செயலர்-தாளாளர் டாக்டர் டி.உதயகுமார், பொருளாளர் கே.தாளமுத்துராஜா, துணைத்தலைவர் எம்.பாஸ்கரன், முதல்வர் எம்.பரசுராம், இயக்குநர் கே.ரஞ்சித் மற்றும் துறைத்தலைவர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...