நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை கைது செய்த தமிழக அரசை


சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை கைது செய்த தமிழக அரசை கண்டித்து, அக்கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் வட்டாரச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.முருகேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து ப்பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி ஆகியோர் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன் நிறைவுரையாற்றினார்.
இதில், வட்டாரச் செயலர்கள் தக்கலை ஜாஸ்மின் சுஜா, தோவாளை எஸ்.மிக்கேல், ராஜாக்கமங்கலம் எஸ்.டி.ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...