வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

குலசேகரத்தில் இன்று ரப்பர் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக ரப்பர் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம்   குலசேகரத்தில் திங்கள்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.

Updated On :9 ஜூலை 2018, 2:15 am

தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக ரப்பர் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம்   குலசேகரத்தில் திங்கள்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் காரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ரப்பர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சட்டத்தின் பிடியிலிருந்து ரப்பர் தோட்டங்களை விடுவிக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சட்டத்தின் பிடியிலுள்ள விளை நிலங்களை  விவசாயிகள் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளும் வகையில் தமிழக அரசு  தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் "4 ஏ' என்னும் சட்டத் திருத்தம் ஏற்படுத்தி அரசிதழில் வெளியிட்டது. இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைக் கூட்டம் குலசேகரம் எப்ஏசி அரங்கில் திங்கள்கிழமை  (ஜூலை 9) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில், மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமார் பங்கேற்று,  விவசாயிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.