தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகர்கோவிலில் வணிகம் புரிவோர் தொழில் வரி செலுத்த அறிவுறுத்தல்

நாகர்கோவில் நகராட்சி எல்லைக்குள் வணிகம் செய்பவர்கள் தொழில் வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :9 ஜூலை 2018, 2:14 am

நாகர்கோவில் நகராட்சி எல்லைக்குள் வணிகம் செய்பவர்கள் தொழில் வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் க.சரவணகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின்படி,  நகராட்சி  எல்லைக்குள் இயங்கி வரும் வணிகம்,  தொழில் நிறுவனங்கள் அனைத்தும் நகராட்சியில் பதிவு செய்து தொழில்வரி விதிப்பு எண் பெறுவதோடு,  உரிய தொழில் வரியும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.  நகராட்சி ஆய்வில் தொழில் வரி செலுத்தப்படாதது கண்டறியப்பட்டால் சட்டப்படி 100 சதவீத அபராதம் விதிக்கப்பட்டு வட்டியுடன் சேர்த்து வசூல் செய்யப்படும்.
எனவே,  நகராட்சி எல்லைக்குள் தொழில் புரிவோர் அனைவரும் உடனே நகராட்சியில் பதிவு செய்து தொழில் வரி விதிப்பு எண் பெற்று மேல் நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.