/

இளைஞரை கொல்ல முயற்சி: தொழிலாளி மீது வழக்கு

மண்டைக்காடு அருகே இளைஞரை தாக்கிய தொழிலாளியை போலீஸார் கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Updated On :23 ஜூலை 2018, 7:56 am IST

மண்டைக்காடு அருகே இளைஞரை தாக்கிய தொழிலாளியை போலீஸார் கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கருங்கல் பாலப்பள்ளம் புதுக்காடு வெட்டிவிளையைச் சேர்ந்த சாம்டேனியல் மகன் அஜின் சாம் (19). இவர் மணவாளக்குறிச்சி அருகேயுள்ள சேரமங்கலம் பொட்டல்விளையில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். 
அப்போது இவர், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவியை பின் தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்தாராம். இதையடுத்து அந்த மாணவியின் தந்தை வில்சன், அஜின்சாமிடம்  சனிக்கிழமை தகராறு செய்ததோடு, கட்டையால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில், மண்டைக்காடு போலீஸார் வில்சன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.