ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட 583 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்துக்குச் சொந்தமான ரப்பர் தோட்டங்கள் கோதையாறு, மருதம்பாறை, சிற்றார், மைலார், மணலோடை, காளிகேசம், கீரிப்பாறை, பரளியாறு ஆகிய 8 மண்டலங்களிலும், அரசு ரப்பர் கழக தொழிற்சாலைகள் கீரிப்பாறை, மைலார் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினக்கூலி அடிப்படையில் சுமார் 1,700 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சுமார் 30 சதவீதம் பேர் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியுடன் சேர்த்து தினக்கூலியாக ரூ. 442 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1.12.2016 முதல் அமல்படுத்த வேண்டிய தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கங்கள் அரசு ரப்பர் கழக நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் 32 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், முறையான ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்த முறையற்ற ஊதிய நிர்ணயத்தை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், அகவிலைப்படி ஒரு புள்ளிக்கு ரூ. 1 வழங்கவேண்டும், மழைநாள் படி அரை நாள் ஊதியம் வழங்கவேண்டும், வேலைக்கான கத்தியை தீட்ட ரூ. 250 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தததால் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 223 பெண்கள் உள்பட 583 ரப்பர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தில் சிஐடியூ தோட்டத் தோழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலர் வல்சகுமார், துணைச் செயலர் நடராஜன், சிஐடியூ மாவட்டச் செயலர் கே. தங்கமோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஆர். செல்லசுவாமி, முன்னாள் எம்எல்ஏ ஆர். லீமாறோஸ், முன்னாள் எம்பிக்கள் ஏ.வி. பெல்லார்மின், ஹெலன் டேவிட்சன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், பிரின்ஸ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் அனந்தகிருஷ்ணன் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் , ரப்பர் தொழிலாளர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாக்அவுட் சுற்று நம்பிக்கையில்...
தமிழகம் எதிர்கொள்ளும்!

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக வாக்குவாதம்

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆய்வு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


