ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காட்டுப்புதூர் பகுதியில் சாலையை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு

குமரி மாவட்டம், காட்டுப்புதூர் பகுதியில் சாலையை  சீரமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என குறைதீர் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Updated On :24 ஜூலை 2018, 12:51 am IST

குமரி மாவட்டம், காட்டுப்புதூர் பகுதியில் சாலையை  சீரமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என குறைதீர் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை  நடைபெற்றது. கூட்டத்துக்கு  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதில் பூதப்பாண்டி பேரூராட்சி பாரதிய ஜனதா மண்டல தலைவர் விஜய்மணியன் தலைமையில் வந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தோவாளை, பூதப்பாண்டி பேரூராட்சிக்குள்பட்ட ஜீவா நகர் மற்றும் காட்டுப்புதூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.இதனை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.  
பூதப்பாண்டியை அடுத்துள்ள சிறமடம் கிராமத்தில் வேளிமலை எஸ்டேட்டில் 50-க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர். வாழை, மரச்சீனி போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. இதில் ஞாலம் ஊராட்சியில் இருந்து சாலை அமைத்து கொடுத்துள்ளனர். இரு பாலம் கட்டியிருக்கிறார்கள். இந்நிலையில் இந்தப் பாதையில் 600 மீட்டர் வனத்துறைக்கு சொந்தம் எனக்கூறி சாலை போடும் பணி தடுக்கப்பட்டுள்ளது. எனவே சிறமடம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையிலும், விவசாயிகள் பயன்பாட்டிற்காகவும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், பாஜக நிர்வாகிகள் கிருஷ்ணன், ஜெயராம், திருக்கோயில் திருமடங்கள் கூட்டமைப்பின் தலைவர்  இறச்சகுளம் காளியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ்  தலைமையில் வந்தவர்கள் அளித்த கோரிக்கை மனு: இடலாக்குடி சி.எஸ்.ஐ. தேவாலயம் ஒக்கி புயலின்போது பாதிக்கப்பட்டது. ஆலய வடக்கு பக்க சுவர் இடிந்து விட்டது. ஓடுகள் காற்றில் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில் ஆலயத்தின் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள் ஆலய வழிபாடு நடக்கும்போது பொதுமக்கள் மீது இடிந்து விழும் சூழலில் உள்ளது. 
இதனால் ஆலயத்தை சீரமைத்து கொண்டிருக்கும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர், காவல்துறையினரிடம் புகார் அளித்து சீரமைப்பு பணிகளை நிறுத்தியுள்ளனர். எனவே ஆலய கட்டுமானத்திற்கான தடையை நீக்கி, பழமையான ஆலய கட்டுமானத்தில் மீதமுள்ள பணியை தடையின்றி நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருக்கோயில் திருமடங்கள் கூட்டமைப்பின் தலைவர் காளியப்பன் தலைமையில் அளித்த கோரிக்கை மனு விவரம்:  கணியாகுளம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்திநகர் பகுதியில் வீட்டுக்கான அனுமதி பெற்ற கட்டடத்தில் கிறிஸ்தவ ஆலயம் நடத்தி வருகின்றனர். இதற்காக முறைகேடான ஆவணங்களை அரசு அலுவலகங்களில் சமர்ப்பித்து மின் இணைப்பு பெற்றுள்ளனர். எனவே தவறான ஆவணங்கள் சமர்ப்பித்து தேவாலயம் நடத்தி வருவதுடன், பொது அமைதியை சீர்குலைத்து மதமோதல் உருவாகும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.