குமரி அறிவியல் பேரவையின் "ஆசிரியர் திலகம்' விருதுக்கான தேர்வுக் குழுக் கூட்டம் மார்த்தாண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குமரி அறிவியல் பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் திலகம் விருது வழங்கப்படுகிறது. தொடக்க கல்வி, பள்ளிக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளி, மாற்றுத் திறனாளி பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமையில் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
இதில், தேர்வுக்குழு பொறுப்பாளர்களாக குழித்துறை கல்வி மாவட்டத்துக்கு கல்வியாளர்கள் சதீஷ்குமார், கிருஷ்ணன்குட்டி, வினோத், ரேகா, செல்லசுவாமி ஆகியோரும், தக்கலை கல்வி மாவட்டத்துக்கு சாம்ராஜ், எட்வின்சாம், ஜோ பிரகாஷ், ஷிபின்ற்றாட், நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கு மத்தியாஸ், திருவேங்கடம், பாலகிருஷ்ணன், சஜீவ் ஆகியோரும், குமரி மாவட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கு கேப்டன் பென்னட்சிங், கோபாலன், ஜான்ரவிகுமார், மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு ஜான்சன், சுனில்குமார், பேராசிரியை தன்யா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் அல்லது பள்ளி தலைமையாசிரியர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கல்விப் பணியாற்றியிருக்க வேண்டும். 45வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மெட்ரிக் பள்ளிகள், மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
மேலும் பள்ளி வளர்ச்சி, மாணவர் நலனில் அக்கறை, சமூகப் பணி, நல்லொழுக்கம், நேரம் தவறாமை உள்ளிட்டவை முக்கிய பங்காக இருக்க வேண்டும். தகுதியுடைய ஆசிரியர் குறித்த தகவலை 99427 - 58333 என்ற செல்லிடப் பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என இந்த அமைப்பின் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!

ஐஐஎம் மும்பை-ல் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

7 மாதங்களுக்கு முன்பு அணியில் இல்லை... அறிமுக உலகக் கோப்பை ஆட்டத்தில் மிரட்டிய ஆஸி. கோல்கீப்பர்!

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


