நாகர்கோவிலில் ஜூன் 8இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.


நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வேலைக்காக காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்திடவும், தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சியை வழங்க பதிவு செய்யவும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று எளிதில் அரசு வேலை கிடைக்க போட்டித்தேர்வுகள் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் பற்றிய விவரங்களை வழங்கவும் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கீழ்க்கண்ட நாள்களில் தொழில்நெறி வழிகாட்டும் கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி, ஜூன் 8ஆம் தேதி, காலை 10.30 மணிக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. ஜூன் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திறன்பயிற்சிக்கு பதிவு செய்தலும், 13ஆம் தேதி காலை 10.30 மணிக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பற்றிய விவரங்கள் எடுத்துரைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த கூட்டங்களில் பதிவுதாரர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் முகாமில் கலந்துகொள்ள வருபவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை அசல் மற்றும் ஒளிநகல்கள் மற்றும் தங்களது சுயக்குறிப்புடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...