6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

குழித்துறை மறைமாவட்ட புதிய குருகுல முதல்வர் நியமனம்

குழித்துறை மறைமாவட்ட புதிய குருகுல முதல்வராக அருள்பணியாளர் யேசுரத்தினம்  நியமிக்கப்பட்டுள்ளார். 

Updated On :29 மார்ச் 2018, 12:22 am

குழித்துறை மறைமாவட்ட புதிய குருகுல முதல்வராக அருள்பணியாளர் யேசுரத்தினம்  நியமிக்கப்பட்டுள்ளார். 
இதையொட்டி, குழித்துறை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற குருக்கள் மாமன்ற கூட்டத்தில், புதிய குருகுல முதல்வரை ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் பணி அமர்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மறைமாவட்டச் செயலர் அருள்பணி. ரசல்ராஜ், பொருளாளர் அருள்பணி. அகஸ்டீன், குருக்கள் மாமன்றச் செயலர் அருள்பணி.  ஒய்சிலின் மற்றும்  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புதிய குருகுல முதல்வரான யேசுரத்தினம் திங்கள்சந்தை அருகேயுள்ள மாங்குழி பகுதியைச் சேர்ந்தவர். 17.4.1977இல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, பல்வேறு பகுதிகளில் பங்குத்தந்தையாக பணியாற்றினார். முளகுமூடு மறைவட்ட முதன்மை குருவாகவும், மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்புவகித்துள்ளார். இறுதியாக மறைமாவட்ட குருக்கள் நலவாரிய இயக்குநராகவும், ஆயரின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி தாளாளராகவும், மஞ்சாடி புனித சூசையப்பர் தேவாலய பங்குத் தந்தையாகவும் பணியாற்றி வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.