விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சடையமங்கலம் ஊராட்சியில் நாளை 2 ஆம் கட்ட மனு நீதிநாள் முகாம்

சடையமங்கலம் ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலரின் 2 ஆம் கட்ட மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (மே 16) நடைபெறுகிறது.

News image
Updated On :14 மே 2018, 7:23 pm

DIN

சடையமங்கலம் ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலரின் 2 ஆம் கட்ட மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (மே 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்குளம் வட்டம், சடையமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அப்பட்டுவிளை புனித ஜோசப் சமூக நலக் கூடத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி திட்ட (இரண்டாம் கட்டம்) நிறைவு நாள் முகாம் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஏப். 19 ஆம்தேதி நடைபெற்ற மனுநீதி திட்ட முதல் கட்ட நிகழ்ச்சியின் போது, பெறப்பட்ட மனுக்களுக்கான உரிய பதில்கள் இந்த இரண்டாம் கட்ட நிறைவு நாள் முகாமில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் துறைவாரியாக அரசு நலத் திட்ட விவரங்களும் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே, சடையமங்கலம் ஊராட்சி பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.