வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தோவாளையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

தோவாளையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image
Updated On :14 மே 2018, 7:23 pm

DIN

தோவாளையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், யாக்கோபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற அரசுப் பேருந்து தோவாளை, தேவர் நகர் அருகே பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக நின்றதாம். பின்னால் ஒரு சொகுசு காரும் வந்து நின்றதாம்.
அப்போது குமளியில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சொகுசுக் கார் மீது மோதியதாம். இதில், முன்னோக்கிச் சென்ற கார், முன்னால் நின்றிருந்த அரசுப் பேருந்து மீது மோதியதாம். இதில், மூன்று வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் காரில் இருந்தவர்களுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டது. மேலும், இந்த விபத்தினால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தகவலறிந்தது வந்த ஆரல்வாய்மொழி போலீஸார் போக்குவரத்தைச் சீர்செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.