சாமிதோப்பில் அன்புக்கொடி மக்கள் சங்கமம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு வைகுண்டசாமி தர்ம பிரஜாரண சபை தலைவர் விஷ்ணுபுரம் சந்திரசேகர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை பாலபிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தார். தெட்ஷண மாற நாடார் சங்கத் தலைவர் சபாபதி நாடார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், அகில இந்திய நாடார் கல்சூரி சம்வர்க்கிய மகாசபைத் தலைவர் லால்சந்த் எச்.குப்தா, அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளைத் தலைவர் பாலஜனாதிபதி, கருங்கல் ஜார்ஜ், பேராசிரியர் ஆர்.தர்மரஜினி, சந்தோஷ், தேவதாஸ், சாமுவேல், சிபு, தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், கன்னியாகுமரி-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டர் பெயரைச் சூட்டவேண்டும். அய்யா வைகுண்டர் வழிபாட்டுத் தலங்களில் தேவசம் போர்டு நிர்வாகம் தலையிடக்கூடாது. அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு ஆகம முறைப்படி அய்யாவழி சமயத்தை அங்கீகரித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
கேரள மாநிலத்தில் உள்ளதுபோன்று அய்யா வைகுண்டர் செய்திகளை தமிழக அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அரசுத் துறை நிர்வாகத்தில் இயங்கும் அனைத்துக் கோயில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவும், தாய் மொழியிலேயே பூஜைகள் வழிநடத்தவும் அரசாணை பிறப்பிக்க வேண்டும். பக்தர்கள் வணங்கும் வழிபாட்டுத் தலங்களை தொல்பொருள் துறையின் வசம் ஒப்படைக்கும் அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைக்கோட்டை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

மணப்பாறையைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்

கோடைகால இலவச தடகளப் பயிற்சி முகாம்

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

