திருவட்டாறு அருகே பிரார்த்தனை கூட்டம் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
திருவட்டாறு அருகே உம்மன்கோடு பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஜெப வீடு உள்ளது. இதில் ரெஜிமோன் (42) போதகராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த குளோரி தனது மகனின் திருமணநாளையொட்டி வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்த முடிவு செய்து, கிறிஸ்தவ ஜெப வீட்டிற்கு செல்பவர்களை அழைத்துள்ளார்.
இதையடுத்து குளோரியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். அப்போது மற்றொரு தரப்பினர் பிரார்த்தனை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில், இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றதாம். இதில், குளோரி உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டதாம். இதுகுறித்து, ரெஜிமோன் அளித்த புகாரின்பேரில் திருவட்டாறு போலீஸார் வர்க்கீஸ், ரெஜின், சபி, சுதாகரன் ரெதீஸ், சஜின் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, இதில் 4 பேரை கைது செய்தனர்.
மேலும், வர்க்கீஸ் அளித்த புகாரின்பேரில் ரெஜிமோன், பிபின்சாமுவேல், சாமுவேல், செல்வகுமார், ஜான்ரோஸ் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், இதில் ஒருவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் !
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

