சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

கருங்கல் அருகே வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் தங்க நகைகள்,  ரூ. 1.90 லட்சம் திருட்டு

குமரி மாவட்டம் கருங்கல் அருகே வீட்டின் கதவை உடைத்து திங்கள்கிழமை 16 பவுன் தங்க நகைகள் மற்றும்

Updated On :22 அக்டோபர் 2018, 7:58 pm

குமரி மாவட்டம் கருங்கல் அருகே வீட்டின் கதவை உடைத்து திங்கள்கிழமை 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
தொலையாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் போஸ்கோ (55). இவர் காதி வாரியத்தில் ஊழியராக உள்ளார். இவரது மனைவி சிஎஸ்ஐ டயோசில் சமூக நலப் பணியாளராக உள்ளார். இவர்களது மகன் மற்றும் மகள் படித்து வருகின்றனர்.  
இவர் தான் பணிபுரியும் அலுவலகத்தில் வசூலாகும் பணத்தை வீட்டில் வைத்திருந்து, வாரம்  ஒரு முறை வங்கியில் செலுத்துவதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் வழக்கம்போல் திங்கள்கிழமை ஜான்போஸ்கோ மற்றும் அவரது மனைவி பணிக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டின் கதவை உடைத்த மர்மநபர்கள்,  பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். மாலையில் வீடு திரும்பிய ஜான் போஸ்கோ, இதுகுறித்து கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.