நாகர்கோவில், குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளர் ந. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் எ. சாம் அருள் மணி முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் கிருஷ்ணர் திருவுருவச் சிலை அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மழலையர் பிரிவைச் சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர், மாணவிகள் கிருஷ்ணர், ராதை மற்றும் இந்து புராணத்தில் உள்ள கதாபாத்திரம் வேடம் அணிந்து பெற்றோருடன் கலந்துகொண்டனர்.
மேலும், கதாபாத்திரம் சார்ந்த குணநலன் மற்றும் சிறப்பு பற்றி எடுத்துக் கூறப்பட்டது. மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் ராம்குமார் தலைமையில் ஆசிரியைகள் இசக்கியம்மாள், தேவகி ஆகியோர் செய்திருந்தனர்.
மீனச்சல் கிருஷ்ண சுவாமி கோயிலில்...
களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை உறியடி விழா நடைபெற்றது.
மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை குழந்தை பருவ கிருஷ்ணரின் வரலாற்றை விளக்கும் வகையில் உறியடி விழா நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து மதியம் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

