சென்னை அருகே 2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பெண்ணை போலீஸார் நாகர்கோவிலில் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அபிராமி (25). இவர்களது குழந்தைகள் அஜய் (7), காருணிகா (4) .
வேலைப் பளு காரணமாக கடந்த 31ஆம் தேதி இரவு விஜய் அலுவலகத்திலேயே தங்கிவிட்டாராம். சனிக்கிழமை (செப். 1) அதிகாலை அவர் வீட்டுக்கு வந்தபோது வெளியே அபிராமியின் மொபெட் இல்லை. எனவே, அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று இருக்கலாம் என்று கருதிய விஜய், தனது மாமியார் வீட்டுக்குச் சென்றார். ஆனால், அபிராமி அங்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனராம். இதனால் சந்தேகம் அடைந்த விஜய், மனைவியின் செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் விஜய் மீண்டும் தனது வீட்டுக்குச் சென்று கதவை திறந்து பார்த்தபோது அங்கு அவரது 2 குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 2 குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அபிராமி தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், சனிக்கிழமை காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர்களின் செல்லிடப்பேசிகளுக்கு அபிராமியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், "எனது குழந்தைகளே சென்று விட்டபிறகு, இனி நான் இருந்தால் என்ன, செத்தால் என்ன" என குறிப்பிட்டு இருந்தாராம்.
இதையடுத்து, அபிராமியின் செல்லிடப்பேசி சிக்னலை வைத்து போலீஸார் விசாரித்தபோது, கடைசியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தைக் காட்டியது. எனவே அபிராமி, தனது வீட்டில் இருந்து மொபட்டில் கோயம்பேடு சென்று அங்கிருந்து பேருந்தில் வெளியூர் தப்பிச் சென்று இருக்கலாம் என தெரியவந்தது. அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர்.
இந்நிலையில், அபிராமி நாகர்கோவிலில் போலீஸாரால் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அவரை போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அபிராமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக குழந்தைகள் கொலை செய்யப்பட்டனரா அல்லது வேறு காரணமா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவின் முதல் தடையற்ற சுங்கச்சாவடி: குஜராத்தில் தொடக்கம்!

வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை: மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அதிகாரி!

இஸ்ரேல் கன்னியாஸ்திரியைத் தாக்கிய யூத இளைஞா் கைது!

தொழிலாளியை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

