ரீத்தாபுரம் அருகே பத்தறை காலனியில் ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு வட்டாட்சியரால் வழங்கப்பட்ட வீட்டுமனையை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் குறைதீர்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ரீத்தாபுரம் தே.மு.தி.க. பேரூர் கழகச் செயலர் ரவி, பத்தறை காலனியைச் சேர்ந்த பொதுமக்களுடன் வந்து மனு கொடுத்தார். அதில், குளச்சலை அடுத்துள்ள ரீத்தாபுரம் கிராமத்தில் பத்தறை ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 18 பேருக்கு 2002 ஆம் ஆண்டு கல்குளம் வட்டாட்சியரால் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சான்று வட்டாட்சியர் அலுவலக பதிவேட்டில் உள்ளது.
ஆனால் பட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையிலும் பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இந்த இடம் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது. எனவே இந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவர்களிடம் இருந்து வட்டாட்சியரால் வழங்கப்பட்ட வீட்டு மனைகளை மீட்டு தருவதோடு, பட்டாவும் தந்து இடத்தை அளவீடு செய்துதர வேண்டும்.
இதேபோல் கணபதிபுரம் இமயம் இளைஞர் மன்றத்தைச் சேர்த நாகராஜன் என்பவர் தலைமையில் அளித்த புகார் மனுவில், கணபதிபுரம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு வீடுகட்ட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோருக்கு வீடு கட்டும் பணி தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது. முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மீதம் உள்ள தொகை வழங்கப்படவில்லை. எனவே வீடுகட்டும் திட்டத்தில் முழுமையாக பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் கொடுத்துள்ள மனுவில் குமரி மாவட்டம், வாழையத்துவயலில் உள்ள 109 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. இந்த நிலைத்தை தனியாரிடம் இருந்து மீட்டு எடுத்து வீட்டுமனை இல்லாத தொழிலாளர்களுக்கு 3 சென்ட் வீதம் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

