98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கருங்கல்லில்  வியாபாரிகள் நலச்சங்க  செயற்குழு கூட்டம்

கருங்கலில் உள்ள வியாபாரிகள் நலச் சங்கக் செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:35 pm

கருங்கலில் உள்ள வியாபாரிகள் நலச் சங்கக் செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்க துணைத் தலைவர் அஜித்குமார் தலைமை வகித்தார். செயலர் துரைராஜ், உதவி செயலர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில்,  வியாபாரிகள் நலச்சங்க ஆண்டு விழாவை செப். 30ஆம் தேதி நடத்தவேண்டும். கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த கல்வி ஆண்டு தமிழ்வழிக் கல்வியில் 10, 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கவேண்டும். கருங்கல் நிர்மலா சந்திப்பு பகுதியில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைக்கவேண்டு என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பொருளாளர் ஆனந்த மார்ட்டின், கௌரவ உறுப்பினர் வேதபால்மர், பேராசிரியர் செல்வம், செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்சிங், சிந்துகுமார், ஜோயல், ஸ்டீப்ன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.