குமரி மாவட்டம், முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் நியாயவிலைக் கடை அருகே பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் சி. ராஜசேகர் தலைமையில் தனித் துணை வட்டாட்சியர் கே. முருகன், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை மாலையில் முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி நியாய விலைக்கடையின் அருகே சந்தேகப்படும் வகையில் சாக்குமூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அந்த சாக்கு மூட்டைகளை சோதனையிட்ட போது அதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியையும், மோட்டார் சைக்கிளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேயோன் எரிமலை வெடிப்பு! சுற்றியுள்ள 6 கி.மீ. பகுதிகள் ஆபத்தானவையாக அறிவிப்பு! | Philippines
வெற்றிலை சர்பத்

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

