அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விசாரணையை தமிழக அரசு, சிபிஐ வசம் ஒப்படைத்தால் நல்லது என்றார், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.
குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகேயுள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நாட்டில் உயர் கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சிறந்த 100 பல்கலைக்கழகங்களில், தமிழகத்தைச் சேர்ந்த 10 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றிருக்கும். பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த, கல்வியில் உயர, கல்விக்காக உழைக்கும், சுயநலமற்றவர்களைதான் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். அதற்கு அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதீப்பீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணையை தமிழக அரசு, சிபிஐயிடம் ஒப்படைத்தால் நல்லது.
வியாபார நோக்கில் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதால்தான் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்தான் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. தகுதி வாய்ந்த எந்த இந்திய குடிமகனும் துணைவேந்தராக நியமிக்கப்படலாம். நாட்டில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ப மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் திறமை, தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களை தயார் செய்ய வேண்டும். மாணவர்களை மனப்பாடம் செய்ய வைக்கும் டியூஷன் முறையை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

கள்ளழகர் தீர்த்தவாரி வைபவ உற்சவம்!

சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.3,237! அப்போ ஒரு டீ விலை?

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

