ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குலசேகரம் மற்றும் திருவட்டாறில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குலசேகரம் மற்றும் திருவட்டாறில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார்.  
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்தாஸ்,  வட்டார செயலர் விஸ்வம்பரன்,  வட்டார குழு உறுப்பினர்கள்  ஸ்ரீகுமார், ஜூடஸ் குமார், நடராஜன் உள்ளிட்டோர் பேசினர். கட்சி நிர்வாகிகள் நாணுகுட்டன்,  ராபிதாஸ், தங்கையன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். சேகர் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினார். திருவட்டாறில் நடைபெற்ற போராட்டத்துக்கு  வட்டாரச் செயலர் ஆர். வில்சன் தலைமை வகித்தார்.  இதில்,  மாவட்டக் குழு உறுப்பினர் சகாய ஆன்டனி பேசினார்.  வட்டாரக் குழு உறுப்பினர்கள் தங்ககுமார், பென் ஜாக்கப்,  மணியன் ஜோஸ் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எம். அண்ணாதுரை போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.