இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

4 வட்டங்களில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4  வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை (செப். 8) நடைபெறுகிறது. 

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4  வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை (செப். 8) நடைபெறுகிறது. 
இதுகுறித்து மாவட்ட   ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்ட சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் அகஸ்தீசுவரம் வட்டத்தில் தேரூர் பேரூராட்சி அலுவலகம், தோவாளை வட்டத்தில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகம், கல்குளம் வட்டத்தில் திக்கணங்கோடு ஊராட்சி அலுவலகம், விளவங்கோடு வட்டத்தில் மாஞ்சாலுமூடு ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றில் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் முகாம்  நடைபெறுகிறது. இம் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.  
மேற்கண்ட பகுதிக்குள்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் மின்னணு குடும்ப அட்டையில் புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்கள் இல்லாமல் இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெற முடியாமல் ரேஷன் கடையில்  ஒட்டப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்பத் தலைவரின் புகைப்படம், செல்லிடப்பேசி எண், ஆதார் எண் பதிவு செய்தல் போன்ற திருத்தங்கள் செய்து விரைவில் மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு மனு அளித்து தீர்வு காணலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.