தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கோட்டையடியில் பெண்களுக்கான கைத்தொழில் பயிற்சி முகாம்

கன்னியாகுமரியை அடுத்த கோட்டையடியில் பெண்களுக்கான கைத்தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது. 

Updated On :25 பிப்ரவரி 2019, 10:06 am IST

கன்னியாகுமரியை அடுத்த கோட்டையடியில் பெண்களுக்கான கைத்தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது. 
   தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம்,  கன்னியாகுமரி பூம்புகார் கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையத்தின் மூலம் கோட்டையடி அருமா கைத்தொழில் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு இலவச கைத்தொழில் பயிற்சி முகாம் 25 நாள்கள் நடைபெற்றது.  இம்முகாமில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த 30 பெண்கள் பங்கேற்றனர். மாநில விருது பெற்ற கைத்தொழில் பயிற்சியாளர் அருள் ஹெப்ஸி பாய் பயிற்சியளித்தார். குறிப்பாக தென்னை நாரிலிருந்து அழகிய கலை பொருள்கள் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது.
   முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு பூம்புகார் விற்பனை நிலைய உதவி இயக்குநர் தருண் தலைமை வகித்து பேசியது: தமிழக அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்திருப்பதால் நார் பொருள்களுக்கு அதிக அளவில் தேவை ஏற்படுகிறது. எனவே, இதில் பயிற்சி பெற்ற பெண்கள் இந்தத் தொழிலை தொடர்ந்து செய்தால் நல்ல லாபம் பெற முடியும். இதற்காக வங்கியின் மூலம் கடன்வசதி பெறும் வசதி உள்ளது. இதை பயிற்சி பெற்ற பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். 
பூம்புகார் விற்பனை மேலாளர் லட்சுமணன், பயிற்சியாளர் வந்தனா ஆகியோர் உரையாற்றினார். தொடர்ந்து பயிற்சியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.