திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நாகர்கோவிலில் இன்று பி.எஸ்.என்.எல். லோக் அதாலத்

பி.எஸ்.என்.எல். சார்பில் மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) நாகர்கோவில் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) நடைபெறுகிறது.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:34 am IST

பி.எஸ்.என்.எல். சார்பில் மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) நாகர்கோவில் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, பி.எஸ்.என்.எல்.  மாவட்டப் பொதுமேலாளர் சஜூகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல்  நிறுவனத்தில் தரைவழி இணைப்புகளுக்கு கட்டணம் நிலுவை காரணத்தால் இணைப்புகள் துண்டிக்கப் பட்டுள்ள ஆரல்வாய்மொழி, அழகப்பபுரம் , பூதப்பாண்டி , ஈத்தாமொழி , இரவிபுதூர் , கீரிப்பாறை , கோட்டாறு, நாகர்கோவில் , கன்னியாகுமரி , ராமன்புதூர் , இராமபுரம் , சுவாமிதோப்பு , தடிக்காரன்கோணம் , தெங்கம்புதூர் , வடசேரி  ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் விதிகளுக்கு உள்பட்டு உரிய தள்ளுபடி பெற்று, நிலுவைத் தொகையை  தீர்வு காணுவதற்கும் தேவையெனில் மறு இணைப்பு பெற்று கொள்ளும் வகையிலும் லோக் அதாலத் முகாம் நாகர்கோவில் நீதி மன்றத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பின் மூலம் பயன்பெறலாம். நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனில் சட்டப் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.